கர்நாடகாவில் யோகி ஆதித்யநாத் ஆட்சி : பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் நடு ரோட்டில் சுடப்படுவார்கள் என பாஜக எம் எல் ஏ கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
கர்நாடகதேர்தல்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஒரு வாரமே காலமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சார மேடையில் கர்நாடக பாஜக எம் எல் ஏ பேசியுள்ளது சர்ச்சையினை கிளப்பியுள்ளது.
[
சுடப்படுவார்கள்
பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னல் பிரச்சார பேரணியில் பேசுகையில், தர்மத்திற்கு எதிராகவோ அல்லது இந்தியாவிற்கு எதிராகவோ செயல்படுபவர்கள் சுடப்படுவார்கள் என்றும், நாங்கள் அவர்களை சிறைக்கு அனுப்புவதை நிறுத்தி, சாலையிலேயே அவர்களுக்கான முடிவு எடுக்கப்படும். என்று வெளிப்படையாக கூறி பரபரப்பை உண்டு செய்தார்.
மேலும், அவர் கூறுகையி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முறையை கர்நாடகாவில் பாஜக அமல்படுத்தும் என்று பாஜக எம்எல்ஏ யத்னால் கூறியுள்ளார்.