காங்கிரஸில் நடிகை ரம்யா போட்டி? பாஜகவை மிரட்டும் பரபர பின்னணி!

Indian National Congress Karnataka Ramya
By Sumathi Mar 31, 2023 10:02 AM GMT
Report

நடிகை ரம்யா மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ரம்யா

நடிகை ரம்யா கர்நாடகா மாநில இளைஞர் காங்கிரஸில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அதன்பிறகு மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 2013ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார்.

காங்கிரஸில் நடிகை ரம்யா போட்டி? பாஜகவை மிரட்டும் பரபர பின்னணி! | Karnataka Election Actress Ramya Contest Congress

அதன்பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் ரம்யாவை ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளர் சிஸ் புட்டராஜூ 5,500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதையடுத்து சமூக வலைதள பிரிவு தலைவராக செயல்பட்ட நிலையில் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

காங்கிரஸில் போட்டி?

தற்போது, மே மாதம் 10ம் தேதி கர்நாடக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, ஜேடிஎஸ் கட்சி தான் எப்போதும் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் பாஜக வெற்றி பெற எப்போதும் சிரமத்தை சந்தித்து வருகிறது.

காங்கிரஸில் நடிகை ரம்யா போட்டி? பாஜகவை மிரட்டும் பரபர பின்னணி! | Karnataka Election Actress Ramya Contest Congress

2019 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியான நடிகை சுமலதா மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றார். இந்நிலையில், நடிகை ரம்யாவை மண்டியாவில் போட்டியிட வைக்கலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் இவர் மண்டியா மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்.

இதனால் சுமலதாவை எளிதாக ரம்யாவால் வீழ்த்த முடியும். மேலும் அவர் சினிமா பிரபலம் என்பதால் பிற தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என காங்கிரஸ் கணக்குப்போட்டுள்ளது. இதனால் தான் காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மண்டியா தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.