கர்நாடகாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 3.4 ஆக பதிவு: பீதியில் பொதுமக்கள்
karnataka
earth quake
By Anupriyamkumaresan
கர்நாடகாவில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் இன்று காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு தஞ்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.