கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி காலமானார்

Karnataka
By Thahir Oct 23, 2022 05:31 PM GMT
Report

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டசபை துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

துணை சபாநாயகர் காலமானார்

ஆனந்த் மாமணி முன்று முறை சவுதாட்டி தொகுதியிலிருந்து பாஜகவின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 56.

மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் சர்க்கரை & கல்லீரல் நோய்த்தொற்று காரணமாக கடந்த ஒருமாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி காலமானார் | Karnataka Deputy Speaker Anand Mamani Passed Away

கர்நாடக முதல்வர், பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தி, தனது இரங்கல் செய்தியை டிவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.

ஆனந்த் மாமணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக, அவரது ஊரில் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது‌.