இந்த உணவு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது - FSSAI உத்தரவு!

Karnataka Kerala Junk Food
By Sumathi Nov 15, 2024 09:39 AM GMT
Report

31 கேரள உணவு பொருட்கள் தரமற்றது என கண்டறியப்பட்டுள்ளது.

தரமற்ற உணவு

கர்நாடகா, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கேரளாவில் தயாரிக்கப்பட்டு குடகு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் விற்கப்படும் 31 தின்பண்டங்களை தரமற்றதாக கண்டறிந்துள்ளது.

இந்த உணவு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது - FSSAI உத்தரவு! | Karnataka Declares 30 Kerala Snacks Unsafe

கேரளாவிலிருந்து வந்த மசாலா மிக்சர்கள், சிப்ஸ் பாக்கெட்கள், அல்வா, முறுக்கு மற்றும் உலர் பழங்கள் போன்ற பிரபலமான தின்பண்டங்களை சேகரித்து FSSAI ஆய்வுக்கு உட்படுத்தியது. இதற்காக 90 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டது.

எல்லோருக்கும் ஹலால் உணவு கிடையாது; ஏர் இந்தியா முடிவு - மெனு மாற்றம்!

எல்லோருக்கும் ஹலால் உணவு கிடையாது; ஏர் இந்தியா முடிவு - மெனு மாற்றம்!

 FSSAI ஆய்வு

சில உணவுப் பொருட்களில் ட் கலர்களான சன்செட் மஞ்சள், அல்லுரா சிவப்பு, அசோரூபின் மற்றும் டார்ட்ராசின் போன்ற செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

FSSAI

இங்கு தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் சாமராஜநகர், மங்களூரு, தட்சிண கன்னடா, குடகு, மடிகேரி, மைசூர் போன்ற கர்நாடக பகுதிகளிலும் வழங்கப்பட்டன என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இது குறித்து விசாரித்து தகவல் அறியுமாறு கேரள அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வர்ணங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. படை நோய், ஆஸ்துமா, அனாபிலாக்ஸிஸ் போன்ற ஒவ்வாமை நோய்களும் உண்டாகிறது.