அடக்கம் செய்ய பணம் வைத்துவிட்டு பெற்ற 4 குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்ட தந்தை
கர்நாடக மாநிலத்தில் தண்ணீரில் விஷம் கலந்து பெற்ற 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த கோபால், ஓய்வு பெற்ற ராணுவ வீரராவார். இவர் இவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது மனைவி ஜெயஸ்ரீ கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் கோபால் நீண்ட நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த வேதனை உச்சமடைய தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோபால் வீட்டை ஆய்வு செய்ததில் ஒரு கடிதமும், அதன் மேல் 20 ஆயிரம் பணமும் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
அந்தக் கடிதத்தில் இந்த 20 ஆயிரம் ரூபாயை பணத்தை வைத்துக் கொண்டு எங்கள் இறுதிச் சடங்கை நடத்த வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.