ரொம்ப அழகாக இருப்பதால் மனைவியை சித்திரவதை செய்த கணவன்: அடுத்து நடந்த பகீர் சம்பவம்

karnataka husband locks up wife inside house wife hangs herself
By Fathima Dec 13, 2021 12:11 PM GMT
Report

கணவன் வீட்டிலேயே பூட்டி வைத்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த வினய், சங்கீதா என்பவரை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு மனைவி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார் வினய்.மனைவி அழகாக இருப்பதால் அவர் யாருடனும் பேச கூடாது என அவரிடம் கூறியுள்ளார்.

மேலும் செல்போனை சோதிப்பது நண்பர்களுடன் பேசினால் சந்தேகிப்பது போன்ற காரியங்களை அவர் செய்துவந்ததால் சங்கீதா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் என்பதால் அவரை விட்டு விலகவும் முடியாமல் தவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வினய்யின் சந்தேக புத்தி அளவுக்கு அதிகமாக சென்றதனால், அவர் சில நாட்களாக சங்கீதாவை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால் ஒருகட்டத்தில் வெறுப்படைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வினய்யை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது