கர்நாடகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..இன்று மட்டும் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

case corona karnataka new record reach
By Praveen Apr 30, 2021 05:37 PM GMT
Report

 கர்நாடகாவில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 23 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தோற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 14 ஆயிரத்து 884 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 24 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.