மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது - கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

Tamil nadu Karnataka
By Karthikraja Aug 20, 2026 01:59 PM GMT
Report

மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது, கர்நாடகாவிற்காக இல்லை என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.

டி.கே.சிவகுமார் பேச்சு

சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. 

மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது - கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் | Karnataka Cm Says Mekedatu Dam For Tamilnadu

இதில், கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், "மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது.

மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன். நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். 

மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது - கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் | Karnataka Cm Says Mekedatu Dam For Tamilnadu

ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை. கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் நம்மை ஒன்றுசேர்க்க வேண்டும், பிரித்து விடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே

இந்த மாநாடு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எங்களின் பல்வேறு நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி சுமூகமாகத் தீர்வு காண அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 

மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது - கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் | Karnataka Cm Says Mekedatu Dam For Tamilnadu

மேகதாது அணை தமிழகத்துக்காக கட்டப்படுகிறது. கர்நாடகாவிற்காக அல்ல, மேகதாது அணை மூலம் கர்நாடகாவுக்கு 5 டிம்சி தண்ணீரையே பயன்படுத்த உள்ளோம்.

பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் குடிநீருக்காக 5 டிஎம்.சி நீரை எடுத்துக்கொண்டு எஞ்சியதை தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வழங்குவோம்" என தெரிவித்துள்ளார்.