எத பத்தியும் கவலையில்ல அணையை கட்டியே தீருவேன் - அண்ணாமலையை வம்பிழுக்கும் கர்நாடக முதல்வர்

annamalai karnatakachiefminister
By Irumporai Aug 05, 2021 09:51 AM GMT
Report

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிராக ஓரணியில் உள்ளனர். இதில் தற்போது பாஜக தான் சொல்ல முடியாத நிலையில் உள்ளது காரணம் கர்நாடகாவில் ஆள்வது பாஜக இந்த விவகாரத்தில் தமிழக பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என அரசியல் ரீதியான அழுத்தம் உண்டானது.

இதில் புதிதாக தலைவர் பொறுப்பேற்ற அண்ணாமலை, தமிழக பாஜக மேகதாது அணைக்கு எதிராகக் குரல் கொடுத்து கர்நாடக அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தப் போவதாகவும் கூறினார்.

இதனை அப்போதே விமர்சித்த புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, யார் உண்ணாவிரதம் இருந்தாலும் எனக்கு கவலையில்லை என்றார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை விட அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை தான் தமிழ்நாடு அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட முதல் நாளே, குடிநீர் திட்டத்துக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. இதைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. அணையை விரைவில் கட்ட பிரதமர் மோடியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில்  இன்று அரசின் தடையை மீறி தஞ்சாவூரில் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். காலையிலேயே மாட்டு வண்டியில் வருகை தந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

தற்போது இதுகுறித்து மறைமுகமாக விமர்சித்துள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை கட்டுவதை அரசியல் ரீதியான காரணத்திற்காக ஒருசிலர் எதிர்க்கிறார்கள். யார் எதிர்த்தாலும் எங்களுக்கு அதுகுறித்து சிறு கவலையும் இல்லை. விரைவில் உரிய அனுமதி பெற்று மேகதாது அணையைக் கட்டி முடிப்போம் என்றார்.