‘‘காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்’’ - கமல்ஹாசன்

kamal karnataka meghadau
By Irumporai Jul 14, 2021 02:33 PM GMT
Report

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியகுரலாக ஒலிக்க வேண்டும். நடந்தாய் வாழி காவிரி என்று பாடும் நம்மை .

நின்றாய் நீ காவிரி என்று வாடும் நிலைக்கு தள்ளுகிறது கர்நாடகா.தடையேதும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நதியில் கர்நாடகா, ஏற்கனவே பல அணைகளை கட்டிவிட்டது.

மேலும் ஒரு அணையை கட்டி தமிழக விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

இரு மாநிலங்கள் நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு அதனை உணரவில்லை.

அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்னையில், மத்திய அரசு கர்நாடக பக்கம் சாய்ந்திருப்பது வழமை.

மேகதாது விவகாரத்தில் இந்த அநீதி போக்கு தொடர்வது நியாயமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் கூறியுள்ளார்.