இஸ்லாமியர்களுக்கு செக் வைக்க நினைக்கும் கர்நாடகா பாஜக - அதிரடி காட்டும் உச்சநீதிமன்றம்
இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து என்ற கர்நாடகா பாஜக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது.
இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி
கடந்த மார்ச் மாதம் 2பி பிரிவின் கீழ் இஸ்லாமியர்கள் பெற்று வந்த 4 சதவீத தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும்,

மாறாக 4 சதவீத இட ஒதுக்கீடு ஒக்கலிகா, லிங்காயத் சமுதாய மக்களுக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும். இஸ்லாமிய மக்களுக்கு உயர் சாதியினரின் பிரிவான EWS பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை கர்நாடகா அரசு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவுக்கு பல்வேறு எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே கர்நாடகாவில் பாஜகவின் மீது இஸ்லாமியர்கள் கடும் அதிருப்பதியில் இருந்து வருகின்றனர்.
இஸ்லாமிய மக்களின் இட ஒதுக்கீட்டை பிரித்துக் தருவதாக இருந்தாலும், நாங்கள் கேட்ட கோரிக்கை நிறைவேறவில்லை என ஒக்கலிகா,லிங்காயத் மக்கள் பாஜகவின் மீது கடும் அதிருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செக் வைத்த உச்சநீதிமன்றம்
கர்நாடகா அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் ஏப்ரல் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை மே9ம் தேதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது.அதுவரை கர்நாடகா அரசு இட ஒதுக்கீடு ரத்து உத்தரவை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து அறிவிப்பு அம்மாநில தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.