மனைவி மீது சந்தேகம் - வெட்டி குதறிப்போட்ட குடிகார கணவன்!!
கர்நாடகாவில் மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன், போதையில் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சந்திரா லே அவுட்டில் வசிக்கும் ஷாகிர் என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. குடிபழக்கத்திற்கு அடிமையான ஷாகிர், அடிக்கடி குடி போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அதிக குடி போதையில் வீட்டிற்கு வந்த ஷாகிர் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரிடம் சண்டையிட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஷாகிர், கத்தியால் மனைவியை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆயிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.