25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை - ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!
ஆண் குழந்தை ஒன்று 25 விரல்களுடன் பிறந்துள்ளது.
அதிசய குழந்தை
கர்நாடகா, கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (35). கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதில், அந்த குழந்தையின் கை மற்றும் கால் விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
ஆச்சர்யத்தில் குடும்பம்
வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் இருந்துள்ளன. இதனால் மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது.
இதனைப் பார்த்த மருத்துவர்களும், குடும்பத்தினரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். தற்போது இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,
“பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.