கர்நாடக சட்டபேரவை தேர்தல் எப்போது : தலைமை தேர்தல் ஆணையர் சொன்ன தகவல் என்ன?

Karnataka
By Irumporai Mar 29, 2023 06:37 AM GMT
Report

கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது.

 கர்நாடகா தேர்தல்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையின் பதவி காலம் மே 24 - ம் தேதியுடன் முடிவடைகின்றது, இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அறிவித்தார். அதில் கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் மே 24 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டு என்ற விதிமுறை உள்ளதாக கூறினார். 

கர்நாடக சட்டபேரவை தேர்தல் எப்போது : தலைமை தேர்தல் ஆணையர் சொன்ன தகவல் என்ன? | Karnataka Assembly Election Announcement

தேர்தல் ஆணையர் தகவல்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 224 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே 3 முனை போட்டி நிலவி வருகிறது. கர்நாடகா தேர்தலுக்கு 124 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு; மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகுக் என  தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் கூறியுள்ளார்.