’’வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது ‘’ - 65 வயதில் காதலியை கரம்பிடித்த காதலன்

married karnataka 30years
By Irumporai Dec 03, 2021 05:57 AM GMT
Report

65 வயதில் அதாவது , 35 ஆண்டுகளுக்கு பிறகு   65 வயது காதலியை காதலர் கரம்பிடித்த  சம்பவம் கர்நாடகாவில் அரேங்கேறியுள்ளது.

மைசூரை சேர்ந்த ஹெப்பாலின் சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் கடந்த 30 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இருவருக்கும் . குடும்ப பிரச்சினை காரணமாக  அவர்களின் காதல்  திருமண பந்தத்தில் இணையாமல் நின்று போனது.

இந்த நிலையில், இந்த ஜோடி நேற்று திருமணம் செய்து கொண்டனர்,  ஜெயம்மாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மா 30 வயதில் இருக்கும்போதே விட்டுசென்று விட்டார்.

 இந்த நிலையில், சிக்கண்ணாவின் காதலை ஏற்று, அவரை திருமணம் செய்ய சம்மதித்தார் ,இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சாலுவராயசுவாமி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீனிவாஸ் குருஜியின் ஆசிரமத்தில் இந்த அபூர்வ ஜோடியின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

’’வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது ‘’ -  65 வயதில் காதலியை கரம்பிடித்த காதலன் | Karnataka 65 Year Old Married After 30 Years

65 வயதுடைய சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் புது மணமக்களாக புது வஸ்திரம் உடுத்தி ஜொலித்தனர். இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, காதலர்கள் திருமணத்தில் இணைந்தனர். 30 வயது காதல், குறையும் வயதில் நிறைவேறியது.

மாண்டியா மாவட்டத்தின் மேல் கோட்டையைச் சேர்ந்தவர்கள் இந்த அபூர்வ திருமண விழாவை கண்டுகளித்தனர். புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ அந்த ஊர் மக்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.