187 நாணயங்களை விழுங்கிய முதியவர்...! - வயிற்றை கிழித்து கொத்துக்கொத்தாக அகற்றிய மருத்துவர்கள்...!

Karnataka
By Nandhini 2 மாதங்கள் முன்

கர்நாடகாவில் முதியவர் ஒருவர் 187 நாணயங்களை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

187 நாணயங்களை விழுங்கிய முதியவர்

கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தியாமப்பா ஹரிஜன் (58). இவர் அடிக்கடி வயிறு வலியுடன், செரிமான சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் நாள்தோறும் வயிறு வலிப்பதாக குடும்பத்தாரிடம் தெரிவித்து வந்துள்ளார்.

சமீபத்தில் இவர் 5 ரூபாய் விழுங்குவதைப் குடும்பத்தார் பார்த்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவரிடம் அவரை அழைத்துக் கொண்டு காண்பித்துள்ளனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்து பரிசோதனை செய்தபோது 100க்கும் மேற்பட்ட நாணயங்கள் வயிற்றுக்குள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அறுவை சிகிச்சை மூலம் அவர் வயிற்றிலிருந்து சுமார் 1.2 கிலோ எடையுள்ள 187 நாணயங்கள் மருத்துவர்கள் அகற்றினர். அதில் 56 ஐந்து ரூபாய் நாயணங்களும், 51 இரண்டு ரூபாய் நாணயங்கள் மற்றும் 80 ஒரு ரூபாய் நாணயங்கள் அகற்றப்பட்டுள்ளது.

karnataka-187-coins-old-man