மீண்டும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் கர்நாடகா? அச்சத்தில் சுகாதாரத்துறை
கடந்த 2020-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி அதன்பின் படிப்படியாக மற்ற உலக நாடுகளுக்கு பரவி ஒரு வருடத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த உலகத்தையே முற்றிலும் முடக்கி போட்டது இந்த பெருந்தொற்று .
இந்த தாக்கத்திலிருந்து பல நாடுகள் இன்னும் மீண்டு வர போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், உயிரிழப்பை குறைக்கவும் உதவியிருக்கிறது. எனினும் புதுவகை கொரோனா வகைகள் பல்வேறு மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் பரவி வருவதின் காரணமாக இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் அமல்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் தான் கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.டி.எம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரவளின் புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியிருகிறது.
கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பிரெஷ்சர்ஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவியதால், சந்தேகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் சுமார் 300 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனையில் இதுவரை மொத்தம் 182க்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் ஃபிரெஷர்கள் பார்ட்டி கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறி வைரஸ் பரவலுக்கு வித்திட்டுள்ளதாக தர்வாத் சுகாதாரத்துறை கமிஷனர் தெரிவித்தார்.