நடிகர் கருணாஸ் மகளுக்கு திருமணம் - வைரலாகும் ஃபோட்டோஸ்
நடிகர் கருணாஸ் மகளின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கருணாஸ் மகள்
பாலா இயக்கிய ‘நந்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் ஹீரோவாகவும் நடித்து பிரபலமானார்.
இவரது மனைவி பின்னணி பாடகி கிரேஸ். ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த தம்பதிக்கு டயானா என்ற மகளும் பென் கருணாஸ் என்ற மகனும் உள்ளனர். தனுஷ் நடித்த ’அசுரன்’ மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தார் பென் கருணாஸ்.
திருமணம்
இந்நிலையில், கருணாஸ் மகள் டாக்டர் டயானாவின் திருமணம் சமீபத்தில் நடந்தது. இவரது திருமண புகைப்படங்களை அவரது சகோதரர் பென் கருணாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து அக்கா மற்றும் மாமாவுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.