இன்று கார்கில் போர் வெற்றி தினம் - உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்!

salute kargilwar 22nd anniversary
By Anupriyamkumaresan Jul 26, 2021 05:21 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கட்டுரை
Report

22ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிரை துச்சமென மதித்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு வெற்றியை நாட்டு பரிசளித்தனர் நம் நாட்டு ராணுவ வீரர்கள்.

இன்று கார்கில் போர் வெற்றி தினம் - உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்! | Kargil 22Nd Anniversary Salute To Military Mans

அந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் காஷ்மீரில் உள்ள டிராஸ் வார் மெமோரியல் கார்கில் போர் நினைவிடத்தில் விழா நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக எளிமையாக விழா நடைபெற்றது. பாகிஸ்தான் இடையே நடந்த போர்களிலேயே 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போர்தான் இன்று வரை மிகவும் தீவிரமான போர். இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் நிகழ்ந்த போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை துவம்சம் செய்து இந்தியா வென்றது.

இன்று கார்கில் போர் வெற்றி தினம் - உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்! | Kargil 22Nd Anniversary Salute To Military Mans

1999-ம் ஆண்டு மே 3ம் தேதி தொடங்கிய போர் ஜூலை 26ம் தேதி வரை நடந்தது. இரண்டு நாடுகளிலும் இந்த போர் காரணமாக நூற்றுக்கணக்கான வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த போரில் வென்றதை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கார்க்கில் போர் நடக்கும் போது உலக நாடுகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் முக்கியமான நாடுகள் பாகிஸ்தானை விமர்சனம் செய்தது . அதேபோல் பாகிஸ்தான் உடன் இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது.

இன்று கார்கில் போர் வெற்றி தினம் - உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்! | Kargil 22Nd Anniversary Salute To Military Mans

எதற்கும் பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. இந்த போரில் இந்தியாவிற்கு முதல் வெற்றி கிடைத்தது ஆப்ரேஷன் விஜய் வெற்றி பெற்ற பின்தான். விமானப்படை உதவியுடன், டைகர் மலை பகுதியை ஜூலை மாதம் இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்த வரிசையாக இந்தியா அடுத்தடுத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளைக் கைப்பற்றியது. டிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் இரண்டாம் வாரம் கார்கில் பகுதியில் அனைத்து இடங்களையும் இந்தியா கைப்பற்றியது.

பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி எல்லா இடங்களையும் இந்தியா மொத்தமாக கைப்பற்றியது. இதன் மூலம் ஜூலை 26ஆம் தேதி கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, இந்தியா அங்கு கொடி நாட்டியது.

இன்று கார்கில் போர் வெற்றி தினம் - உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்! | Kargil 22Nd Anniversary Salute To Military Mans

கார்கில் போர் நடைபெற்ற போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல போர் காட்சிகள் நொடிக்கு நொடி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்த அனைவருமே போர் பற்றியும், நாட்டின் வெற்றி பற்றியும் வீரர்களின் தியாகம் பற்றியும் பேசினர்.

இந்த கார்கில் வெற்றி பாகிஸ்தானில் மட்டும் இந்தியாவின் வலிமையை பறைசாற்றவில்லை. மொத்த உலகத்திற்கும் இந்தியாவின் வலிமை அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக ஆசிய கண்டத்தில் இந்தியா முக்கியமான நாடாக மாறியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு பெரிய அளவில் விழா நடைபெறவில்லை.

இன்று கார்கில் போர் வெற்றி தினம் - உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்! | Kargil 22Nd Anniversary Salute To Military Mans

பாஜக தலைவர் ஜெ.பி நட்டா உயிரிழந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். கார்கில் போரில் எதிர் நாட்டுடன் போராடி உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு நாமும் வீர வணக்கம் செலுத்துவோம். தீரத்தோடு போரிட்ட அனைத்து வீரர்களையும் மரியாதையுடன் நினைவு கூர்வோம்.