பள்ளி தேர்வில் பிரபல நடிகை குறித்து வெளியான கேள்வி - கொந்தளிக்கும் பெற்றோர்கள்

School Question Kareena Kapoor Paper
By Thahir Dec 25, 2021 12:28 PM GMT
Report

மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்புக்கான தேர்வில் கரீனா கபூர் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் கந்த்வா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பொது அறிவுக்கான வினாப் பிரிவில் கரீனா கபூர் கான் மற்றும் சயிஃப் அலிகான் மகனின் முழு பெயரை எழுதுமாறு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது .

இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்ததோடு , இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளியான அகாடமிக் ஹைட்ஸ் பப்ளிக் ஸ்கூல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு பள்ளிக் கல்வித் துறையிடம் புகார் அளித்துள்ளனர் .

இந்த நிலையில் , பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரின் புகாரின்படி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கந்த்வா மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார் .

முறையான பதில் வராத பட்சத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார் . இதனிடையே மேற்குறிப்பிட்ட 6 ஆம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது .