கொரோனா காலத்தில் கர்ப்பம்; ஆமீர்கான் செய்த செயல் - மனம் திறந்த கரீனா கபூர்
என்னிடம் பேசாமல் இருந்து விடாதீர்கள் எனஆமீர்கான் கேட்டுக்கொண்டதாக கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் 2000 ஆம் ஆண்டில் வெளியான Refugee படம் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவர் 2012 ஆம் ஆண்டு சக நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளது.
கர்ப்பம்
இந்நிலையில் கர்ப்பமாக இருந்தபோது ஆமீர்கான் உதவியது குறித்து கரீனா கபூர் பேசியுள்ளார். 2022 ஆம் ஆமீர் கான் தயாரித்து நடித்த லால் சிங் சத்தா படத்தில் ஆமீர் கான் ஜோடியாக கரீனா கபூர் நடித்திருப்பார்.
இது குறித்து பேசிய அவர், "கொரோனா லாக்டவுன் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது நான் கர்ப்பமாகி விட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது ஆமீர் கானுக்கு போன் செய்து 'நான் கர்ப்பமாக இருக்கிறேன்.
ஆமீர் கான்
நான் 2வது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டால் கூட பரவாயில்லை. ரொம்ப சாரி என்று என்னலாமோ பேசினேன். நான் உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக காத்திருப்போம் என்று ஆமீர் கான் கூறினார்.
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் மனமுடைந்த ஆமீர்கான், 'இந்த படம் தோல்வியடைந்ததால் என்னிடம் பேசாமல் இருந்துவிடாதீர்கள்' என்று ஆமீர் கான் கேட்டுக்கொண்டார். இந்த படத்தின் மீது அந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்" என கரீனா கபூர் தெரிவித்தார்.