டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்.! அதிர்ச்சியில் கட்சி உறுப்பினர்கள்

tnelectionresults karambakudiward7admk0votes mnmcandidtae0vote admkmnmlosesdeposit
By Swetha Subash Feb 23, 2022 02:20 PM GMT
Report

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் அதிமுக வேட்பாளர் இப்ராம்சா ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது பலத்த அதிர்ச்சியை அதிமுகவினருக்கு கொடுத்துள்ளது.

கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகள் 11 வார்டில் திமுக கூட்டணியும், அதிமுக, 2 இடத்திலும் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அந்த பேரூராட்சியில் 7-வது வார்டில் திமுக சார்பில் ப.பரூக், அதிமுக சார்பில் முகமது இப்ராஹிம்ஷா, நாம்தமிழர், மார்சிஸ்ட் லெனினிஸ்ட், சுயேச்சைகள் உள்பட 6 பேர் போட்டியிட்டனர்.

அதே வார்டுக்கு உள்பட்ட பகுதியில் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்துவரும் முகமது இப்ராஹிம்ஷாவிற்கு , 1 வாக்கு கூட பதிவாகவில்லை என்பது புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதே வார்டில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வேட்பாளர் க.தர்மராஜ் என்பவரும் 1 வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைப் போலவே சிவகங்கையில் 1-வது வார்டு பகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் 1 ஓட்டு கூட வாங்காமல் படுதோல்வி அடைந்துள்ளார்.