என்னை தெரியலையா? பதறிய ஹெச் ராஜா நடந்தது என்ன?
பாஜக சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் ஹெச்.ராஜா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று பனம்பட்டி கிராமத்தில் ஹெச்.ராஜா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு சிறுவனிடம் பாசமாக உன் பெயர் என்ன? என்ன வகுப்பு படிக்கிறாய் என்று கேட்க,அதற்கு அந்த சிறுவன் 7 ஆம் வகுப்பு என கூறினான்.
உடனே அந்த சிறுவனிடம் நம் நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவனோ, எனக்கு தெரியாது என சொல்ல திகைத்து போன அவர் தேர்தல் துண்டு பிரசுரத்தை காண்பித்துள்ளார். பின்னர், அந்த தூண்டு பிரசுரத்தில் உள்ள தனது புகைபடத்தை காட்டி சரி இது யாரு என்று சொல் பார்க்கலாம் என கேட்க அந்த சிறுவனோதெரியல என அப்பாவியாக கூறினான்.

பதறிபோன ஹெச்.ராஜா, விறுவிறுவென மாஸ்க்கை கழற்றி நான் தான் அது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடையை கட்டினார்.
இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காரைக்குடியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திறமைசாலி . அவருக்காக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கூறினார்.