மாங்குயிலே பூங்குயிலே : தலையில் கரகம் வைத்து நடனமாடிய கலெக்டர் .. கலைகட்டிய பொங்கல் விழா
Thai Pongal
By Irumporai
பொங்கல் விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் இருக்கும் பள்ளியில் சுற்றுலாத்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது.
கரகம் வைத்து ஆடிய கலெக்டர்
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து தலையில் கரகம் வைத்து நடனம் ஆடினார்.
இதை பார்த்த மக்கள் கரகோஷம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினார்கள். மேலும் இந்த விழாவில் நகர்மன்ற தலைவர், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி வெங்கடாஜலபதி, தாசில்தார் அப்துல் ஜபார், ராமகிருஷ்ணா மட பள்ளி தாளாளர் சுவாமி பிரணவணந்தா, உதவி சுற்றுலா அதிகாரி என பல பங்கேற்றார்கள்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது