ரவி சாஸ்திரி நீக்கப்பட வேண்டுமா? - கபில்தேவ் சொன்ன பதிலால் அதிர்ச்சி
பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். அவரது பதவி காலம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையோடு முடிவடைகிறது. இதனிடையே இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு ராகுல்டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய கபில்தேவ், இலங்கை தொடர் முடிந்த பின்பு ஒரு புதிய பயிற்சியாளரை நியமிக்க முயற்சி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ரவிசாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் சிறப்பாகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து தொடருக்காக கூடுதல் வீரர்களை சேர்த்து ஏற்கனவே உள்ளவர்களை அவமதிக்க வேண்டாம். இதுபோன்ற முடிவு சரியானது அல்ல என்றும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.