பாவமன்னிப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களை பதம் பார்த்த பாதிரியார்
கன்னியாகுமரி அருகே பாவமன்னிப்பு வழக்குவதாக கூறி பெண்களிடம் நெருக்கம் காட்டிய பாதிரியார் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாதிரியார் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டக்கல்லுாரி மாணவன் மீது புகார்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனிடிக் ஆண்டோ. இவர் பிலாங்காலை பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருந்து வருகிறார்.
இதையடுத்து பெனிடிக் ஆண்டோவுக்கும், பிலாவிளை என்ற பகுதியை சேர்ந்த சட்ட கல்லுாரி மாணவன் ஆஸ்டின் ஜினோ என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பெனிடிக் ஆண்டோ, கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
இளம் பெண்களுடன் அத்துமீறல்
அதில் பல்வேறு பெண்களிடம் பாதிரியார் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்டுள்ள ஆவணங்களை சமர்பித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மினி அஜிதா, பாதிரியார் பெனிடிக் ஆண்டோ அந்த பகுதியில் உள்ள கல்லுாரி மாணவிகளிடம் தரக்குறைவாக நடத்து கொண்டுள்ளார்.
இதை தட்டிக் கேட்டதால் தன் மகன் ஆஸ்டின் ஜினோ தட்டிக்கேட்டதால் தன் மகன் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிரியார் பெனடிக் சர்ச்க்கு வரும் இளம் பெண்களின் செல் போன் எண்களை வாங்கி அவர்களுக்கு தினம் தோறும் மெசேஜ் அனுப்பி அவர்களை கரெக்ட் செய்து என்ஜாய் செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெனடிக் பெண்களுடன் தனிமையில் அத்துமீறிய புகைப்படக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாதிரியார் பெனடிக் தலைமறைவாகியுள்ளதால் தகவல் வெளியாகியுள்ளது.