80க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் - உல்லாச பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ அதிரடி கைது
கன்னியாகுமரி அருகே பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாதிரியார்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனிடிக் ஆண்டோ. இவர் பிலாங்காலை பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருந்து வருகிறார்.
இவர் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான புகைப்படங்களை அனுப்பியதாக புகார் ஒன்றை சம்மந்தப்பட்ட பெண் காவல்துறையினரிடம் அளித்திருந்தார்.
இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பெனடிக் பெண்களுடன் தனிமையில் அத்துமீறிய புகைப்படக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்
இதையடுத்து பாதிரியார் பெனடிக் தலைமறைவானார். இந்த நிலையில் சைபர் க்ரைம் போலீசார் அவர் வைத்திருந்த லேப் டாப்பை ஆய்வு செய்த போது 80க்கும் அதிகமான பெண்களின் ஆபாச படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீசார் தேடி வந்தனர்.
நாகர்கோவில் வழியாக வெளி மாவட்டத்திற்கு பெனடிக்ட் தப்பிச் செல்ல உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது அவரை போலீசார் செல் போன் டவர் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.