கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்னன் போட்டி

election bjp Radhakrishnan kanyakumari
By Jon Mar 06, 2021 11:01 AM GMT
Report

தமிழகத்தோடு சட்டமன்ற தேர்தலோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் மறைவை தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியானது. திமுக கூட்டணியில் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் மீண்டும் அங்கு பாஜகவே போட்டியிட இருக்கிறது.

பாஜக சார்பில் மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்னன் ஏழு முறை போட்டியிட்டு இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளார்.

தற்போது எட்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.