9 மாத குழந்தையை கொன்ற தாய்: திடுக்கிட வைக்கும் சம்பவம்
கன்னியாகுமரியில் 9 மாத குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மயிலாடி அடுத்த காமராஜர் நகரை சேர்ந்தவர் ராம்குமார், சென்னையை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முதலில் இவர்களது காதல் திருமணத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், குழந்தை பிறந்த பின்னர் ராம்குமாரின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராம்குமார் குடும்பத்துடன் மயிலாடியில் தங்கியுள்ளார். அண்மையில் அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. எனவே மனைவியை தனது தாய் மற்றும் சகோதரர்கள் பாதுகாப்பில் விட்டுவிட்டு சென்றார். அதன்பிறகு கவிதா மற்றும் அவரது மாமியார் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்பராணி வெளியே சென்றதும் , கவிதா தற்கொலை செய்து கொள்ள திட்டம் தீட்டனார். அதன்படி சேலையால் குழந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அவரும் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார். வீட்டுக்கு வந்த இன்பராணி மருமகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கவிதாவையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் கவிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.