அமாவாசைக்கு மட்டும்தான் திருடுவேன்.. கொள்ளையன் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்- மிரண்டுபோன போலீஸ்!
அமாவாசை தினத்தில் மட்டும் திருடும் திருடன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் மூன்று வீடுகளில் கதவைச் சத்தமில்லாமல் உடைத்து கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இந்த இரண்டும் அமாவாசை அன்று நடந்துள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன் பிறகும் 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த மர்ம நபர் 40 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் லுங்கி, சட்டை அணிந்து கையில் கம்பி கட்டப்பையுடன் வரும் நபர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.அதுமட்டுமில்லாமல் திருட்டில் ஈடுபட்ட பிறகு முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுக் காட்சிகள் இடம்பெற்றிருந்தனர்.
அமாவாசை
இதனையடுத்து குளச்சல் தனிப்படை அமைத்த 5 மாதங்களாகக் கண்காணித்து வந்த நிலையில் கொள்ளையன் மதுரையைச் சேர்ந்த 60 வயதான சுந்தர் ராஜ் என்பது தெரியவந்தது.அவரை அதிரடியாகக் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அம்மி கொத்தும் தொழில் செய்து வந்த சுந்தர் ராஜ் குடும்ப வறுமை காரணமாக 5 வருடஙளுக்கு முன் திருட்டு தொழிலில் இறங்கியுள்ளார்.ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களிடம் சிக்காமல் இருக்க அமாவாசை இரவு நேரத்தில் மட்டுமே திருட்டில் ஈட்டுப்பட்டது தெரியவந்தது.
மேலும் திருடிய பணத்தில் வீடு கட்டி வருவதாகவும், கார், லாரி, குட்டியானை ஆட்டோ வாங்கி டிரான்ஸ்போர்ட் தொழிலுடன் கயிலான்கடை தொழிலும் செய்துவருவதாகவும், சொந்த ஊரில் தொழிலதிபர் போல வலம் வருவதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.