கல்யாணத்திற்கு பிறகு ஏற்பட்ட திடீர் கள்ளக்காதல்! பயத்தில் இருவரும் செய்த விபரீத செயல்!
நாகர்கோவில் அருகே கல்யாணத்திற்கு பிறகும் காதலை தொடர்ந்தவர்கள் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை வண்டி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி வித்யா தேரூர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
பணி நிமித்தமாக சுரேஷ்குமாரும், வித்யாவும் அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இருவருக்குமிடையே கள்ளக்காதல் மலர்ந்தது. இதனையடுத்து வித்யா தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்து, சுரேஷ்குமார் உடன் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக பொழுதை கழித்து வந்துள்ளார்.
இந்த தகவல் சுரேஷ்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.மேலும் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் கள்ளகாதலை விட்டு விடுவார் என நினைத்து, நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த பெண்ணை சுரேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஏனோ மனைவியுடன் நன்கு வாழ்ந்துவந்தாலும், கள்ளக்காதலி நினைவாக இருந்ததால் மீண்டும் இருவரும் சந்திக்க துவங்கினர்.
பிரிந்துவாழ முடியாமல் இருவரும் செட்டிகுளம் என்னும் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மனைவியை காணவில்லை என சுபாஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் அவர்களை தேடி வரும்
தகவல் அறிந்ததும், இருவரும் பயத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.