அடிப்படை வசதிகள் செய்து தர கோரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியின் மாணவ, மாணவிகள் உணவு, தண்ணீர் இன்றி தவித்துவருவதால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பட்டப்படிப்பு பயின்று வரும் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறி தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நாட்களாக கொரோனா நோயாளிகள் தங்கும் அறை அருகே தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், முறையாக தங்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக புகார்கள் அனுப்பினால் சான்றிதழ் வாங்க முடியாதபடி செய்துவிடுவதாக கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் அவதிக்குள்ளான மாணவர்கள் உடனடி நடவடிக்கை கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
