தொடரும் கனமழை - நாளை கன்னியாகுமரி சென்று நேரில் ஆய்வு செய்யும் முதல்வர்

Kanyakumari M. K. Stalin Chief Minister of Tamil Nadu heavyrain
By Anupriyamkumaresan Nov 14, 2021 08:14 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

கன்னியாகுமரியில் தொடரும் கனமழையால், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்கிறேன்.

தொடரும் கனமழை - நாளை கன்னியாகுமரி சென்று நேரில் ஆய்வு செய்யும் முதல்வர் | Kanniyakumari Heavyrain Cm Stalin Inspection

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம். தேவைப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் வழியாக பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்போம்.

வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஓடிக்கொண்டிருக்கிறேன். கடந்த ஆட்சியில் அதிமுக செய்த முறைகேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.