திருமணமான பெண்ணுடன் தகாத உறவு. தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிளை!
கன்னியாகுமரி அருகே தகாத உறவின் காரணமாக புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த சங்கரன்புதூரைச் சேர்ந்த சுரேஷ் குமார், தேரூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷ்குமாருக்கு அதே அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த வித்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வித்யாவுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும், இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் சுரேஷ்குமாரின் வீட்டுக்கு தெரிய வரவே அவரை ஊராட்சி வேலைக்கு செல்ல வேண்டாம் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இதையடுத்து, சுரேஷ்குமார் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
மேலும், சுரேஷ்குமாருக்கு தென்காசியை சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயக்கிப்பட்டு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், சில காலம் வித்யாவிடம் பழகாமல் இருந்து வந்த சுரேஷ்குமார் மீண்டும் பழக ஆரம்பித்துள்ளார். மீண்டும், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று சந்தித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் வித்யாவின் கணவருக்கு தெரிய வரவே மனைவியை எச்சரித்துள்ளார். இதையடுத்து, சுரேஷ்குமாரும், வித்யாவும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.
இதுகுறித்து இரு வீட்டாரும் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் காதல் ஜோடிகளை தேடி வந்த போலீசாருக்கு இருவரும் கூடங்குளம் பகுதியில் தஞ்சம் அடைந்திருப்பது தெரிய வந்தது. சம்பவத்தன்று தங்களை போலீசார் நெருங்கிவிட்டதை நினைத்து அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமாரும், வித்யாவும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து வித்யா ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.