கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
கன்னியாகுமரி
தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த குமரி பகுதி,1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மாகாணத்தின் கீழ் இருந்தது. திருவாங்கூா் மாகாணத்தின் மாநிலங்கள் இணைத்து கேரளா மாநிலம் உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் திருவாங்கூா் மாகாணத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி மொழியானது.
இதனை கடுமையாக எதிர்த்த தமிழர்கள் மார்சல் நேசமணியின் தலைமையில் நடத்திய போராட்டத்தின் விளைவாக திருவாங்கூா் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டு நாகா்கோவிலை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
அழகு மீனா ஐ.ஏ.எஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53வது ஆட்சியராக 21.07.2024 அன்று அழகு மீனா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் 4வது பெண் மாவட்ட ஆட்சியர் ஆவார். முன்னதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்ட போது அதன் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது என தாம்பரம் மாநகராட்சியை தூய்மைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கு முன்னதாக தேசிய சுகாதார இயக்க மாநில திட்ட மேலாளராகவும் பணியாற்றி வந்தார்.
ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ்
ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் 2012 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். முன்னதாக பெரு நகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையாளர், சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை வழித்தடத்தின் திட்ட இயக்குனர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். அதன் பிறகு கடந்த 06-02-2023 அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
தற்போது மாநில தேர்தல் ஆணையராக உள்ள ஜோதி நிர்மலா ஐ.ஏ.எஸ், முன்னாள் தலைமை செயலாளர் எல்.கே. திரிப்பாதி ஐ.ஏ.எஸ், முன்னாள் TNPSC சேர்மன் கா. பாலச்சந்திரன், ஐஏஎஸ், ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ், ராஜேஷ் லகானி ஐஏஎஸ் உள்ளிட்டோர் இங்கு மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளனர்.