மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றி வேறு மாணவியுடன் தப்பியோடிய காமுகன் கைது!
கன்னியாகுமரியில் 12-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி தாயார் வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த அபி என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலனோ மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுது நாட்களிலேயே அபி 10-ம் வகுப்பு மாணவியுடன் வீட்டை விட்டு ஓடியதாக மாணவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த 10-ம் வகுப்பு மாணவியின் பெற்றோரும் காவல் நிலையத்தில்
புகார் அளித்துள்ளார். இந்த புகார்களை தொடர்ந்து பதுங்கியிருந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.