’’என்னால தாங்க முடியல ’’ புனீத் குமாரின் மரண செய்தியை கேட்டு தேம்பி அழுத செய்தி வாசிப்பாளர் - வைரலாகும் வீடியோ
புனீத் ராஜ்குமாரின் செய்தியை வசிக்கும் போதே, செய்தி வாசிப்பாளர் கண்கலங்கி அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது.
மறைந்த கன்னட பவர் ஸ்டார், நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், பெங்களூரில் உள்ள மைதானத்துக்கு வருகை தந்துகொண்டு இருக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் முழுவதும் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு நகரம் காவல் துறையினரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னட நடிகராக இருந்து வந்த புனீத் ராஜ்குமார், அம்மாநில மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.
அவர் 45 இலவச பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவற்றை சொந்த பணத்தில் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். இதனைப்போல, 1800 மாணவர்கள் கல்விக்கும் வழிவகை செய்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒளிபரப்பாகும் B TV என்ற செய்தி ஊடகத்தில், செய்தி வாசிப்பாளர் புனீத் ராஜ்குமாரின் மறைவு செய்தியின் போது தன்னிலை அறியாமல் செய்தியை வசித்தபடியே அழுதுவிட்டார்.
அவரை அமைதிப்படுத்திய சக ஊழியர்கள், சுமார் 1 நிமிடத்திற்கு பின்னர் மீண்டும் வழக்கம்போல செய்தியை வாசிக்க வைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.