இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடமா? - கொந்தளித்த மக்கள்

Kannada Ugliest language in india
By Petchi Avudaiappan Jun 03, 2021 01:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கூகுளில் இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடா என்று காண்பித்ததால் ட்விட்டரில் கன்னடர்கள் கொந்தளித்துவருகின்றனர்.

பல்வேறு மொழி,இனம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் அடங்கியது இந்தியா என்பது உலக நாடுகளிடையே நமக்கான அடையாளம். இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய வரலாற்று பெருமையைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு மொழியைச் சேர்ந்த மக்களும் தங்கள் மொழி மீது அளப்பறிய பற்றைக் கொண்டுள்ளதோடு மற்ற மொழிகளை கற்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் அசிங்கமான மொழி எது? என்று கூகுளில் தேடும் போது கூகுள் கன்னடம் என்று பதிலைக் காட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கெதிராக குரல் எழுப்பியுள்ள கன்னடர்கள் கூகுள் நிறுவனம் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில், உலக மொழிகளின் ராணி என்ற கேள்விக்கும் கன்னடாவைக் கூகுள் காண்பித்துள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட தவற்றை கூகுள் நிறுவனம் திருந்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.