பிரபல நடிகை உயிரிழப்பு;அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் நடந்த விபரீதம்..!

Bengaluru
2 மாதங்கள் முன்

உடல் எடையை குறைக்க செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறானதால் பிரபல கன்னட நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்தார்.

கன்னட சின்னத்திரையில் பிரபல இளம் வயது நடிகையாக வலம் வருபவர் சேத்தனா ராஜ் இவருக்கு வயது 21. இவர் கீதா,தோரேசானி ஒலவின நில்தன ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை உயிரிழப்பு;அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் நடந்த விபரீதம்..! | Kannada Famous Actress Chetana Raj Dies

சேத்தனா ராஜ் உடல் பருமனாக காணப்பட்டதால் அவரிடம் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அழகாக மாறலாம் என அவரது தோழிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இது குறித்து அவரது பெற்றோரிகளிடம் அறுவை சிகிச்சை செய்வது குறித்து கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் தனது பெற்றோருக்கு தெரியாமல் தனது உடல் பருமனை குறைக்க முடிவு செய்து நண்பர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று அதிகாலை சேத்தனா ராஜிக்கு மருத்துவர்கள் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவருக்கு நுரையீரல் பகுதியில் நீர் கோர்த்தது.இதனால் அவர் மூச்சு விட முடியால் திணறியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் சேத்தனா ராஜை பசவேஸ்வராநகரில் உள்ள இருதய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது மருத்துவமனை சென்று சேர்வதற்குள் அவர் உயிரிழந்தார்.அவர் உயிரிழந்த விவரத்தை மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவர்கள் மருத்துவர்களில் அலட்சியத்தால் தான் தன் மகள் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

இதனிடையே மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.இச்சம்பவம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் மீது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.