20 வயது மகனை பறிகொடுத்த பிரபல இயக்குநர் - திரையுலகினர் சோகம்
By Petchi Avudaiappan
பிரபல இயக்குநரின் 20 வயது மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட மற்றும் துளு பட இயக்குநர் சூர்யோதை பேரம்பள்ளி இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவருடைய 20 வயது மகனும், கல்லூரி மாணவரான மயூர் கடந்த வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மயூர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மயூர் மரணமடைந்தது திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.