தங்கம் கடத்தியதாக பிரபல நடிகை - விமான நிலையத்தில் கைது செய்த போலீஸ்!
தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரான்யா ராவ்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரன்யா ராவ் கன்னடத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம் , தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கைது
இதனையடுத்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகத் தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை ரான்யா ராவ் துபாயிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.