பெண்ணை மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய பிரபல நடிகர் கைது!

Jiyath
in பிரபலங்கள்Report this article
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஸ்வயம் க்ருஷி என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் வீரேந்திர பாபு. இவர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் 36 வயதான பெண் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்து காப்பி கொடுத்து மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் கேட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த பெண் தனது நகைகளை விற்று பணம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 30ம் தேதி வீரேந்திர பாபு மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு காரில் ஏற்றிச்சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி விலையுயர்ந்த தங்க நகைகளை பறித்துள்ளார்.
நடிகர் கைது
இந்நிலையில் இதுகுறித்து பெங்களூரு கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் இருந்து இருந்து பென் டிரைவ், மொபைல் போன்கள், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து வீரேந்திர பாபு மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்துள்ளது.