தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் விபத்தில் பலி - திரையுலகினர் சோகம்
பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் மரணமடைந்த நிகழ்வு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.
பெங்களூருவில் வசித்து வந்த சஞ்சாரி விஜய் கடந்த சில தினங்களுக்கு முன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சஞ்சாரி விஜய்யின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.