விபச்சார வழக்கில் இளம் நடிகர் கைது - அதிர்ச்சி!
விபச்சார வழக்கில் இளம் நடிகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுநாத் (எ) சஞ்சு
பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுத்து சிலர் போலியாக விபச்சார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மோசடியில் ஈடுபட்ட மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், அனுமேஷ், ராஜேஷ், மோகன், மஞ்சுநாத் என்ற சஞ்சு ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் மஞ்சுநாத் என்ற சஞ்சு சில கன்னட படங்களில் நடித்து இருப்பதும்,
விபச்சார வழக்கு
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் இளம்பெண்களின் புகைப்படங்களை விபச்சார செயலியில் பதிவு செய்துள்ளனர்.
அதை உண்மை என்று அணுகி தொடர்பு கொள்பவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். விபச்சார மோசடி வழக்கில் நடிகர் கைதானது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை IBC Tamil
அகற்றப்பட்ட ஞானசார தேரரின் காவி உடை: அரசுக்கு கடும் அழுத்தம் - தொடர்ந்து பறக்கும் கடிதங்கள் IBC Tamil