“எந்த ஹோட்டல்ல ஆர்டர் பண்ணாலும் கவனமா சாப்பிடுங்க” - கண்மணி சீரியல் நடிகை ஷாம்பவி பகிர்ந்த அதிர்ச்சிகர வீடியோ

sun tv kanmani serial actress shambavy shocking insta post
By Swetha 10 மாதங்கள் முன்

சன் டிவி சீரியலில் நடித்து வரும் ஷாம்பவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களை அதிகம் கவர்ந்தது கண்மணி.

இந்த சீரியலில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வரும் ஷாம்பவி குருமூர்த்திக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

எப்பொழுதும் சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாம்பவி தன்னை சார்ந்த விஷயங்களை தன்னுடைய ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில் ஷாம்பவி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சிகர தகவலுடன் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

அந்த பதிவில், “சென்னையில் ஷூட்டிங்கின் போது பிரபல ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்திருந்தேன். அந்த ஆர்டர் செய்யப்பட்ட உணவில் இருந்த வடையில் ஒரு சிறியரக ப்ளாஸ்டிக் துண்டு இருந்தது.

இதை தெரியாமல் சாப்பிட்டபோது அது என் தொண்டையில் சிக்கியது. மிகவும் சிரமப்பட்டுதான் வெளியில் எடுத்தேன். நீங்களும் எந்த ஹோட்டலில் ஆர்டர் செய்யதாலும் கவனமுடன் சாப்பிடுங்கள்.

தற்போது அந்த ஹோட்டல் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.