2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தரிசனத்திற்காக திறக்கப்பட்ட காஞ்சிபுரம் முருகர் கோவில்!
குமரக்கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முருகர் கோவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உட்பட்டு பொது மக்களின் தரிசனத்திற்க்காக திறக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் முருகர் கோவில் என்றால் குமரக்கோட்டம் என்று அழைக்கப்படும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயில் கொரரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது .
தமிழக அரசு மூன்று பிரிவாக மாவட்டங்களைப் பிரித்து அதில் மூன்றாவது பிரிவில் வரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ,சென்னை ஆகிய மாவட்டங்களில் திருக்கோயில்கள் இன்று முதல் திறக்கலாம் என அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி காஞ்சிபுரம் முருகர் கோவிலில் இன்று காலை 6:15 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பொதுமக்கள் மாஸ்க் அணிந்த பின்னரும், கிருமி நாசினி பயன்படுத்திய பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மேலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் கோவில் கோவில்கள் திறக்கப்படும் என கூறப்படுகிறது.