தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் - பட்டப்பகலில் நடந்த என்கவுன்ட்டர்: கொள்ளையனை சுட்டு கொன்ற போலீசார்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொடர் வழிப்பறி நகை கொள்ளையில் ஈடுபட்டு துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கசாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வயதான பெண்ணின் கழுத்திலிருந்த 6 சவரன் தங்க நகையை 2 மர்மநபர்கள் மிரட்டி வழிப்பறி செய்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண், ஐயோ ஐயோ என்று கூச்சலிட, பொதுமக்கள் ஒன்று திரண்டு மர்மநபர்களை விரட்டி சென்றுள்ளனர். அப்போது தப்பியோட முயற்சித்த கொள்ளையர்கள், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விரட்டி வந்த பொதுமக்கள் சுட முயற்சித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த மர்மநபர்கள் ஏரி பகுதிக்குள் பதுங்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தப்பியோடிய கொள்ளையனை பிடிக்க சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொள்ளையனை போலீசார் என்கவுன் ட்டரில் சுட்டு கொன்றனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த கொள்ளையன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தஸா என்பது தெரியவந்துள்ளது.
மேலும் மற்றொரு கொள்ளையனான நைதீமையும் சிறுதி நேரத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.