முகத்தை சிதைத்து மர்மநபர்கள் வெறிச்செயல் - ரவுடி வெட்டி கொடூர கொலை!
உத்திரமேரூர் அருகே முகத்தை சிதைத்து ரவுடி வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் கொலையாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காவிதண்டலம் கிராமம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 25 வயதுடைய தமிழ்வேந்தன் என்பவர் மீது காவல் நிலையத்தில் கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவலையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு, தமிழ்வேந்தன் கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் உட்கார்ந்திருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், தமிழ்வேந்தனின் முகத்தை சிதைத்து, மிக கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த
போலீசார், தமிழ்வேந்தனின் சடலத்தை மீட்டு, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.