வீட்டில் அழுகிய நிலையில் 2 சடலங்கள்.. துர்நாற்றம் வீசியதால் வெளிப்பட்ட மர்மம்! பொதுமக்கள் அதிர்ச்சி!
காஞ்சிபுரத்தில் குடும்ப பிரச்சினையால் 6 வயது குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாவூர் பகுதியை சேர்ந்த உமா என்பவருக்கும் அவரது கணவர் முருகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த உமா தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உமா வீட்டின் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்ற போய் பார்த்தபோது உமா மற்றும் அவரது 6 வயது குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
மேலும் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.